குப்பைத்தொட்டியில் உணவு தேடிய காட்டு யானை வீடியோ வைரல்

குப்பைத்தொட்டியில் உணவு தேடிய காட்டு யானை வீடியோ வைரல்
X

குப்பை தொட்டியில் உணவு தேடும் காட்டு யானை.

குப்பைத்தொட்டியில் காட்டு யானை உணவைத் தேடும் இந்த காட்சி வனவிலங்கு ஆர்வலர்களிடையே வேதனையை அளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மசனகுடி பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. குடிநீர் மற்றும் உணவை தேடி காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது. இந்நிலையில் மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள குப்பைத் தொட்டியில் காட்டு யானை ஒன்று உணவைத் தேடி அதிலிருந்த பொருட்களை உண்ணும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

குப்பைத்தொட்டியில் உணவு உள்ளதா என காட்டு யானை நீண்ட நேரம் அதே பகுதியில் முகாமிட்டதால் குடியிருப்பு வாசிகள் வெளியே வரமுடியாமல் அச்சமடைந்தனர். அதேசமயம் காட்டு யானை ஒன்று குப்பைத்தொட்டியில் உணவைத் தேடும் இந்த காட்சி வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே வேதனையை அளித்துள்ளது.

Tags

Next Story
why is ai important to the future