உதகை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி

உதகை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி
X

காட்டு யானை தாக்கியதில் பலியான மூதாட்டி சரசம்மாள்

மசினகுடி அருகே விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி. காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி அருகே உள்ள ஆனைக்கட்டி பகுதியில் வசித்து வரும் சரசம்மாள் என்ற மூதாட்டி வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியிலிருந்த காட்டு யானை மூதாட்டியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரவு நேரமாகியும் சரசம்மாள் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் வன பகுதிக்குள் சென்று தேடிய போது அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சீகூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!