கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் தண்ணீர் தினம் கடைபிடிப்பு

தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்னாளில் தண்ணீரைச் சேமிக்கவும் பாதுகாக்கவும் விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள சிறிய மதுரை ஊராட்சியில் இன்று தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவிகள் தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்களை கோஷங்கள் மூலம் தெரிவித்தனர்.
இதில் பிடிஓ., ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர் சுனில், உதவி பிடிஓ., நம்பிராஜ், நாராயணன், துணைத் தலைவர் ரஜி மேத்யூ, வார்டு உறுப்பினர் சில்தா, சிக்மாரி, செயலாளர் சோனி ஷாஜி, பள்ளி ஆசிரியர்களும் உட்பட மாணவர்களும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu