கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்ட மக்கள் கோரிக்கை

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்ல 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கூடலூர் அருகே கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக விநாயகன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர் தொடர்ந்து அதே பகுதியில் நடமாடும் யானையால் விளை நிலங்களும் குடியிருப்புகளும் சேதமடைந்து வருகின்றன.

இதையடுத்து முதுமலை ஊராட்சிக்குட்பட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம பகுதி மக்கள் அட்டகாசம் செய்து வரும் விநாயகன் என்ற காட்டுயானையை பிடித்து முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும், தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்போவதாக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது