கூடலூரில் சவ்சவ் காய்கறி விளைச்சல் அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலூரில் சவ்சவ் காய்கறி விளைச்சல் அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
X

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில்,  கடந்த ஆண்டை காட்டிலும் சவ் சவ்  விளைச்சல் அதிகரித்து, கூடுதல் விலையும் கிடைக்கிறது. 

அறுவடை செய்யும் சவ்சவ் எனப்படும் மேரக்காய்கள், தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகவுக்கும் ஏற்றுமதியாகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பாகற்காய், பஜ்ஜி மிளகாய், சவ் சவு எனப்படும் மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள், பல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு நிலவும் காலநிலை சமவெளி பகுதிகளைப் போல் இருப்பதால், சமவெளிப் பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறிகளும் பெரும்பாலாக விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

தற்போது கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில், மேரக்காய் அதிக அளவில் விளைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு, சவ் சவ் மேரக்காய் விலை கிலோ 25 வரை விற்கப்படுவதாலும் மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடையே நேரடி கொள்முதல் செய்வதாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுவடை செய்யும் காய்கள், தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Tags

Next Story