முதுமலை சாலையில் ஆபத்தை உணராமல் யானைகளை படம்பிடித்த சுற்றுலாப் பயணிகள்

முதுமலை சாலையில் ஆபத்தை உணராமல் யானைகளை படம்பிடித்த சுற்றுலாப் பயணிகள்
X

முதுமலை சாலையில் நடமாடும் யானைகள்.

முதுமலை செல்லும் சாலையில் வாகனங்களை நிறுத்தி யானைகளை புகைப்படமெடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இதனால் யானை, புலி, மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக யானைகள் கூட்டம் குட்டிகளுடன் மேய்ச்சலில் ஈடுபட்டு சாலையை கடக்கிறது. அதிகமான வாகனங்களும் சாலை வழியே சென்று வருவதால் அச்சமின்றி ஆர்வக்கோளாறு காரணமாக சுற்றுலாப் பயணிகள் சிலர் யானை கூட்டத்தின் அருகே வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதும் வீடியோ எடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே யானை கூட்டங்கள் சாலையோரத்தில் மேய்ச்சலில் ஈடுபடும்போது சுற்றுலாப்பயணிகள் புகைப்படம், வீடியோ, எடுக்கக்கூடாது என வனத்துறை மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!