/* */

கூடலூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற சுற்றுலா பயணி பலி

நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற சுற்றுலா பயணி பலி
X

பலியான சுற்றுலா பயணியை மீட்க்கும் தீயணைப்பு படையினர்.

கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள தொரப்பள்ளி பகுதியில் சுற்றுலாவிற்காக வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். நீண்ட நேரமாக ஆற்றில் குளியலிட்ட மூவரில் ஒருவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உடனிருந்தவர்கள் கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் ஆற்றில் இருந்து தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். போலீசார் விசாரணையில் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 3 பேர், ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது தொரப்பள்ளி ஆற்றில் 3 பேரும் குளிக்கச் சென்றனர். அப்போது, 3 பேரில் நீச்சல் தெரியாமல் வினோத் (45) என்பவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போலீசார் உயிரிழந்த உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலாவிற்காக வந்த இடத்தில் குளிக்கச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  3. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  4. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  5. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  6. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  7. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  8. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  9. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  10. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...