கூடலூரில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

கூடலூரில் மின்  நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்
X

பைல் படம்.

கூடலூரில் நாளை மின் நுகர்வோருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.

கூடலூரில் நாளை நடக்கிறது மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மின்சார சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவிக்கலாம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நீலகிரி வட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் கூடலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை வியாழன்று நடைபெற உள்ளது.

இதில் மேற்பார்வை பொறியாளர் வாசு நாயர் பிரேம்குமார் தலைமை தாங்குகிறார் கூடலூர் நகரம், கூடலூர் நகரம் தெற்கு, தேவர்சோலை , மசனகுடி பந்தலூர், சேரம்பாடி, அய்யங்கொலி உப்பட்டி பிரிவு அலுவலகத்தைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு மின்சாரம் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம் என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நீலகிரி வட்டம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!