சாலையோரம் உலா வந்த புலி: ஆபத்தை உணராமல் படம்பிடித்த வாகன ஓட்டிகள்

சாலையோரம் உலா வந்த புலி: ஆபத்தை உணராமல் படம்பிடித்த வாகன ஓட்டிகள்
X

சாலையோரம் சுற்றித்திரிந்த புலி.

பந்திப்பூர் சாலையோரம் புலி ஒன்று கர்ஜித்து சாலையோரத்தில் ஒய்யாரமாக நடந்து சென்றதை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் படம் பிடித்துள்ளனர்.

முதுமலையில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லக்கூடிய பந்திப்பூர் சாலை அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். இந்த அடர்ந்த வனப்பகுதி சாலையில் நாள்தோறும் நீலகிரியிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

சாலை ஓரங்களில் மான் மற்றும் காட்டு மாடுகள் கூட்டம் அதிகமாக காணப்படும். புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுவது மிகவும் அரிதான ஒன்றாகும்.

இந்நிலையில் இன்று பந்திப்பூர் சாலையோரம் புலி ஒன்று கர்ஜித்து சாலையோரத்தில் ஒய்யாரமாக நடந்து சென்ற காட்சியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் படம் பிடித்துள்ளனர். தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!