பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை

பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை
X

பந்திப்பூர் அருகே சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க புலி வனப்பகுதி ஒட்டியுள்ள சாலையில் உலா வந்து சாலையை கடந்து சென்றது.

பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த புலியை வாகன ஓட்டி அச்சத்துடன் படம் பிடித்துள்ளார்

வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையோர வனப்பகுதியில் நடமாடுவது வாடிக்கையாக உள்ள நிலையில், நேற்று இரவு சுமார் 8வயது மதிக்கத்தக்க புலி சாலையில் உலா வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் முடிந்து தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதுமலை, தெப்பக்காடு போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. சமீப காலமாக சாலையில் புலிகள் உலா வரும் வீடியோ சுற்றுலா பயணிகள் கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாகிய நிலையில், நேற்று இரவு மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பந்திப்பூர் அருகே சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க புலி வனப்பகுதி ஒட்டியுள்ள சாலையில் உலா வந்து சாலையை கடந்து சென்றது.

இந்த காட்சியை அவ்வழியாக பயணித்த சுற்றுலா பயணி தனது கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இரவு நேரங்களில் முதுமலை, தெப்பக்காடு, மைசூர் செல்லும் சாலையில் பயணம் மேற்க் கொள்வோர் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story