கூடலூர் அருகே மீண்டும் பசு மாட்டை கொன்ற புலி, அச்சத்தில் பொதுமக்கள்

கூடலூர் அருகே மீண்டும் பசு மாட்டை கொன்ற புலி, அச்சத்தில் பொதுமக்கள்
X

கூடலூர் அருகே புலிதாக்கி பலியான பசு

கூடலூர் அருகே மீண்டும் பசுமாட்டை புலி அடித்து கொன்றது, இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முதுமலை பகுதியில் உள்ள கிராமத்தில் மீண்டும் புலியின் அட்டகாசத்தால் பசுமாடு பலியானது, ட்ரோன் கேமரா மூலம் புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

சமீபகாலமாக முதுமலை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் புலி நடமாட்டம் காணப்பட்டு அடிக்கடி பசுமாடுகளை தாக்கி கொன்று வருகிறது.

இந்நிலையில் வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மீண்டும் களஞ்சேரி என்னும் கிராமத்தில் பசு மாட்டை தாக்கி புலி கொன்றது.

மேலும் சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கால்நடைகளை தாக்கிக் கொன்று வரும் புலியால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!