மீண்டும் மீண்டும் தப்பிக்கும் புலி: அச்சத்தில் பொதுமக்கள்

மீண்டும் மீண்டும் தப்பிக்கும் புலி: அச்சத்தில் பொதுமக்கள்
X

புதரில் இருந்து வெளியே வந்த புலி.

தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த முற்பட்டபோது தப்பியது.

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் மேபீல்டு பகுதியில் கடந்த 5 நாட்களாக அட்டகாசம் செய்து வரும் புலி தற்போது வரை வனத்துறைக்கு சிக்காமல் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் புலியை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நேற்றும் இன்றும் புலி கண்ணில் தென்பட்டும் வனத்துறைக்கு சிக்காமல் தப்பியது.

இந்நிலையில் இன்று மாலையும் புதரில் இருந்த புலியை கண்ட வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த முற்பட்டபோது, மீண்டும் புலி தப்பியது. கடந்த இரண்டு நாட்களில் கண்ணில் தென்பட்டும் புலி வனத்துறையினருக்கு சிக்காமல் தப்பி ஓடி வருவதால் வனத்துறைக்கு புலியை பிடிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இன்று இரவு வரை கண்காணிப்பில் இருந்த வனத்துறையினர் மீண்டும் நாளை காலை முதல் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபடவுள்ளனர். நாளையாவது போக்குகாட்டும் புலி சிக்குமா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story
டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓவிற்கு எப்படி அப்லே  பண்றது அப்டிங்கிறத பாப்போம்