வாகனத்தை துரத்திய காட்டு யானை: நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலாப்பயணிகள்

வாகனத்தை துரத்திய காட்டு யானை: நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலாப்பயணிகள்
X

மாயார் செல்லும் சாலையில் வாகனத்தை துரத்திய காட்டு யானை. 

மசினகுடி மாயார் சாலையில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டு யானை திடீரென துரத்தியதால் சுற்றுலாப்பயணிகள் நூலிழையில் உயிர்தப்பினர்.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை புலி சிறுத்தை மான் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக சாலையோரங்களில் அடிக்கடி யானைகள் மேய்ச்சலில் ஈடுபடும்.

இந்நிலையில் மசினகுடியிலிருந்து மாயார் செல்லும் சாலையில் யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த போது அந்த சாலை வழியே சென்ற சுற்றுலாப்பயணிகள் அதை புகைப்படம் எடுத்துள்ளனர்.

திடீரென கோபமடைந்த அந்த யானை, வாகனத்தை நோக்கி தாக்க வந்தது. உடனடியாக வாகன ஓட்டி சாதுரியமாக வாகனத்தை எடுத்துச் சென்றார்.

இதில் வாகனத்தில் சென்றவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!