உதகையில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் சிக்கின

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உட்கோட்டம் கக்கநல்லா சோதனை சாவடியில் இன்று கூடலூர் காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது மைசூரில் இருந்து உதகை நோக்கி வந்த காய்கறி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் பொழுது அதில் பிற மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
இது சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களிடமிருந்து 14.250 லிட்டர் பிறமாநில மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது இது சம்பந்தமாக மசனகுடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தும் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் அவர்களிடம் இருந்த 38 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன அவர்கள் வந்த வாகனமும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக மசினகுடி காவல் நிலையத்தில். Masinagudi PS Cr.No 69/21 u/s 4(1)(a) TNP Act வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu