/* */

காயப்பட்ட கரடி சிகிச்சைக்குப் பின் வனத்தில் விடப்பட்டது

காயப்பட்ட கரடி மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பின் மீண்டும் வனத்தில் விடப்பட்டது.

HIGHLIGHTS

காயப்பட்ட கரடி சிகிச்சைக்குப் பின் வனத்தில் விடப்பட்டது
X

காயப்பட்ட கரடி மருத்துவ சிகிச்சைக்குப் பின் வனத்தில் விடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்க்கு உட்பப்பட்ட மசினகுடி, சிங்காரா, மாயார் போன்ற பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகள் கொண்டது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை,யானை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

சமீப காலமாக இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் மசினகுடியிலிருந்து மாயார் செல்லும் சாலையில் மரவகண்டி என்னும் அணை அருகே மின் வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளது.


இந்த குடியிருப்பில் பல கட்டிடங்கள் பராமரிப்பின்றி மூடி கிடைக்கின்றது. இன்று காலை பராமரிப்பின்றி மூடிக்கிடந்த ஒரு குடியிருப்பிலிருந்து வனவிலங்கு சப்தம் எழுப்பியதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பொழுது சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க கரடி ஒன்று குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்று மாட்டிக்கொண்டதையும், முதுகில் காயம்பட்டு அவதியடைந்ததையும் கண்டறிந்தனர்.

உடனடியாக கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை குடியிருப்பு பகுதியில் இருந்து எடுத்து வந்தனர். மூன்று வன கால்நடை மருத்துவர் கொண்ட மருத்துவ குழுவினர் கரடிக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் கரடியே கூண்டில் ஏற்றி மாயார் வனப்பகுதிக்குள் விட எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து இப்பகுதியில் T23 புலி நடமாட்டம் இருந்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே காயத்துடன் கரடி மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 Oct 2021 8:34 AM GMT

Related News