கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்த T23 புலி

கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்த T23 புலி
X

டி23 புலி தப்பிக்கும் காட்சி

வனத்துறையினருக்கு 15 நாட்களாக போக்கு காட்டி வரும் T 23 புலி வனத்துறையினரிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் கடந்த 15 நாட்களாக T23 புலியை தேடும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


65 கேமராக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் என அனைவருக்கும் இதுவரை சிக்காமல் உள்ளது T23 புலி நாள்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் புதரிலிருந்து T 23 புலி தப்பிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி அன்று கூடலூர் மேபீல்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் புலியைக் கண்டு அருகே செல்லும் பொழுது உருமிய சத்தத்துடன் புதரில் இருந்து தப்பிக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இதனிடையே புதரில் இருந்து தப்பிக்கும் புலிதான் T23 என வனத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்29.09.21 தேதிக்கு பின் பின் இதுவரை T23 புலி கண்ணில் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்குக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!