நீலகிரியில் இடம் பெயர்ந்த T23 புலி: பாெதுமக்கள் அச்சம்

மீண்டும் போஸ்பரா பகுதிக்கு சென்றிலிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம். இதனால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

18 நாட்களாக 23 புலியைத் தேடி வரும் வனத்துறையினர் 8 நாட்களுக்கு பின் இன்று கேமராவில் சிக்கியது. புலி வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

கடந்த 18 நாட்களாக மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் T 23 புலியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர் 65 தானியங்கி கேமராக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் என அனைவரும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதுவரை கேமராவிலும் பதிவாகாத புலி இன்று கேமராவில் பதிவாகி உள்ளதாகவும் மசனகுடி யிலிருந்து போஸ் பரா எனும் பகுதிக்கு சென்று இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து முதுமலை பகுதியில் உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் மீண்டும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர் தற்பொழுது கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் வனப்பகுதி வனப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் விறகு சேகரிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

18 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் புலி மீண்டும் ஏற்கனவே கால்நடைகளையும் மனிதர்களையும் அடித்துக்கொன்ற பகுதிக்கு மீண்டும் திரும்பி உள்ளதா என பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருந்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!