T 23 புலியை 20 வது நாளாக தேடம் பணி தீவிரம்
தேடுதல் பணியில் ஈடுபட்டடுள்ள வனத்துறையினர்.
மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி இருந்த T23 புலி கடந்த திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஒம்பெட்டா வனப்பகுதிகள் வந்தது உறுதி செய்யப்பட்டது.
அங்கு பொருத்தபட்டிருந்த தானியங்கி கேமராவில் அதிகாலை 3 மணிக்கு புலியின் உருவம் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் புலி போஸ்பரா, தேவன் எஸ்டேட், மேல்பீல்டு பகுதியை நோக்கி திரும்பவது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழக கேரள வனத்துறையினர் தொடர்ந்து 20-வது நாளாக புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளபட்டிருக்கிறது. முதுமலை வன பகுதிக்கு உட்பட்ட போஸ்பரா, மண்வயல், முதுகுளி, நாகம்பள்ளி கிராம மக்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தற்சமயம் புலி இருக்கும் இடத்தை தானியங்கி கேமரா, புலியின் கால் தடங்களை கண்டறிய வனத்துறை குழு வனப்பகுதிக்குள் விரைந்திருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu