பதுங்கிய T 23 புலி: தீவிர தேடுதல் பணியில் வனத்துறை

பதுங்கிய T 23 புலி: தீவிர தேடுதல் பணியில் வனத்துறை
X

புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்.  

புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் தேவையன்றி வெளியே வர வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தல்.

கடந்த 18 நாட்களாக வனத்துறையினருக்கு சிக்காமல் போக்கு காட்டி வரும் T 23 புலி மசினகுடி வனப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட போஸ்பரா பகுதியில் சுற்றித் திரிகிறது. இதையடுத்து அந்த கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே ஊராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் மக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று புலியை கண்டும் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரவு மற்றும் அதிகாலை வேளையில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!