T 23 புலி கண்காணிப்பு பணி தற்போது எப்படி உள்ளது?

T 23 புலி  கண்காணிப்பு பணி தற்போது எப்படி உள்ளது?
X

முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ். 

T23 Tiger Meaning-T 23 புலியை கண்காணிக்க 5 குழு கொண்ட தலா 8 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ் பேட்டி.

T23 Tiger Meaning-மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி குறித்தி முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் புலியை தொடர்ந்து வனத்துறை தேடி வருகின்றனர். நேற்று புலி நடமாட்டம் தென்பட்ட பகுதிகளில் 5 மாடுகள் கட்டப்பட்டு அதன் அருகாமையில் பரண்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. இருப்பினும் புலி தென்படவில்லை.

இங்கு 25 கோமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. இதில் இரண்டு புலிகள் தென்பட்டது. ஆனால் அது T23 புலி அல்ல. முதுமலையில் இருந்து கூடலூர் செல்லும் வழியில் புலி நடமாட்டம் உள்ள பகுதியில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அங்கும் T23 புலி நடமாட்டம் பதிவாகவில்லை. இன்று காலை அனைத்து பணியாளர்களும் 8 பேர் கொண்ட 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜெடி சாலை, ஸ்கேட்ஷ் சாலை இடது மற்றும் வலது புறம், உப்புபள்ளம் பகுதிகளில் இந்த குழுக்கள் பிரித்து அனுப்பபட்டடது.

அதிலும் T23-யின் எந்த கால் தடமும் கிடைக்கவில்லை. எனவே இந்தப் பணி நாளையும் தொடரும். மேலும் அந்த பகுதிகளில் கூடுதலாக 40 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று 25 கேமராக்கள் வைக்கப்பட்டது. தற்பொழுது அதன் அருகே 40 கேமராக்கள் என மொத்தம் 65 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் நாளை காலை ஆய்வு செய்து புலி நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கப்படும்.

இந்த பணி தினமும் காலை தொடர்ந்து நடைபெற்றும் இதில் புலி குறித்து தடயங்கள் கிடைக்கப்பெற்றால் அந்த பகுதியில் தேடுதல் பணி தொடந்து நடைபெறும். எந்த ஒரு வனவிலங்கு இருந்தாலும், மனிதர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்போது அது அதனுடைய இடத்தை மாற்றிக்கொள்ளும்.

ஆனால் தற்சமயம் இந்த புலி எந்த ஒரு கேமராவிலும் பதிவாகமல் தற்போது அதே இடத்தில் பதுங்கி இருப்பதாலும் அங்கு புதர்கள் அதிகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியவில்லை. T23 புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபடுவதால் அவர்களுக்கு ஒரு நாள் ஓய்வு என சுழற்சி முறையில் பணிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மாயார் வனபகுதியில் ஒரு மாடு புலியால் அடிக்கப்பட்டடு உயிரிழந்துள்ளது. அது T23 புலியா அல்லது வேறு புலியா என்று நாளை தெரிய வரும். தற்சமயம் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டடு வருகிறது என்று தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture