அடுத்தடுத்த நகர்வுகள்: T 23 புலி சிக்குமா?

அடுத்தடுத்த நகர்வுகள்: T 23 புலி சிக்குமா?
X

பரணில் அமர்ந்து புலியை கண்காணிக்கும் வனத்துறை அதிகாரிகள்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் அமைக்கப்பட்ட பரணில் அமர்ந்து புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்.

கடந்த 13 நாட்களாக T 23 புலியை பிடிக்க வனத்துறையினர் மிகத் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஏற்கனவே கூறியிருந்த அறிவியல் சார்ந்த ரீதியாக புலியை பிடிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று அதிகாலை முதல், புலி இருக்குமிடம் கண்டறியப்பட்ட பகுதியில் பரணில் அமர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து நான்கு இடங்களில் அமைக்கப்பட்ட பரணில் அந்த குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!