மசினகுடி பகுதியில் T23 புலியை கண்காணிக்க சிறப்பு குழு

மசினகுடி பகுதியில் T23 புலியை கண்காணிக்க சிறப்பு குழு
X

புலியைத் தேடும் பணியில் வனத்துறையினர்

மசினகுடி சிங்காரா வனப்பகுதியில்சுற்றிதிரியும் T23புலியை பற்றிய தமிழக தலைமைவனஉயிரின பாதுகாவர் சேகர்குமார்நீரஜ் பேட்டி

மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் T23 புலியை பற்றிய தமிழக தலைமை வனஉயிரின பாதுகாவர் சேகர் குமார் நீரஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது. T-23 புலியைத் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் புது வியூகங்களை வைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அதே போல் ஓரிடத்தில் புலியின் கால் தடம் கண்டுள்ளதாகவும் அது T-23 புலியின் கால் தடம்தானா என வனத்துறை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் முதன்மை வன உயிரின காப்பக பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.

கடைசியாக மூன்று நாட்களுக்கு முன் புலியை கண்டுள்ளதாகவும் இதுவரை கால்நடைகளை தாக்கவில்லை என்றார். புலியின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மேலும் 20 கேமராக்கள் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரமும் புலியின் நடமாட்டம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story