சிங்காரா வனபகுதி: மீண்டும் புலி தாக்கி ஒருவர் பலி
புலி தாக்கி உயிரிழந்த நபர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த ஏழு நாட்களாக ஆட்கொல்லி புலி மிகுந்த அட்டகாசம் செய்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் 3 மனிதர்களைக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் குறும்பர் பாடி இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது. இதில் அவரது தலை பகுதியை தின்ற புலி வனத்துறையிடம் இருந்து தப்பியது. இதனிடையே மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலியை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக, கேரள , கர்நாடக, இணைக்கும் சாலையில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே உதகையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேவன் எஸ்டேட் , மேபீல்டு, சிங்காரா பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த 75 வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழு, வேட்டை தடுப்பு காவலர்கள் புலியை பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆட்கொல்லி புலியை பிடிக்கும் வரை மக்கள் வீட்டை வீட்டு வெளிய வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu