பந்தலூரில் சிறுவனிடம் சீண்டல்: போக்சோவில் ஒருவர் கைது

பந்தலூரில் சிறுவனிடம் சீண்டல்: போக்சோவில் ஒருவர் கைது
X
நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு, தொழிலாளி சுப்ரமணியம் (48) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர், சேரம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பந்தலூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் என்பவரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai future project