பந்தலூரில் மதுபாட்டில்கள் பறிமுதல்

பந்தலூரில் மதுபாட்டில்கள் பறிமுதல்
X

மாதிரிப்படம்

கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில், 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை பதுக்கியவர்களை தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நம்பியார் குன்னு பகுதியில், மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, அம்பலமூலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், அங்குள்ள ஒரு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை பதுக்கி வைத்தது யார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!