மைசூர் சோதனை சாவடியில் மதுபாட்டில்கள் பறிமுதல்
நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு உட்பட்ட கக்கநல்லா சோதனை சாவடியில் காய்கறி ஏற்றி வந்த இரண்டு வாகனங்களில் மறைத்து எடுத்து வரப்பட்ட அண்டை மாநில மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்து இருவரை கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உட்கோட்டம் கக்கநல்லா சோதனை சாவடியில் இன்று கூடலூர் காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது இரண்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வந்த இரு நபர்களை சோதனை செய்யும் பொழுது அவர்களிடமிருந்து பிற மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதன் சம்பந்தமாக தேவர் சோலையை சேர்ந்த சஞ்சிவ் தேவ் மற்றும் ஊட்டி பார்சன்ஸ் வேலியை சேர்ந்த நாராயணன் ஆகியோர் மசினகுடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 165 & 206 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன அவர்கள் வந்த வாகனங்கள்கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக மசினகுடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu