கனமழை எதிரொலி: நீலகிரியில் 19ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: நீலகிரியில் 19ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

கோப்பு படம் 

கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும் மரங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளில், துறை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள், சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, உதகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக 19.11.2021 வெள்ளிக்கிழமை, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் பொறுப்பு கீர்த்தி பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!