முதுமலையில் உள்ள சேரன் என்ற வளர்ப்பு யானைக்கு மீண்டும் பார்வை

முதுமலையில் உள்ள சேரன் என்ற வளர்ப்பு யானைக்கு மீண்டும் பார்வை
X

சேரன் யானை.

பாகன் தாக்கியதில் கண் பார்வையை இழந்த 33 வயதுடைய சேரன் யானைக்கு வனத்துறை எடுத்த முயற்சியால் மீண்டும் பார்வை திரும்பியது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் இருபத்தி எட்டு வளர்ப்பு யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானைகளுக்கும் தனி பாகன்கள் உள்ளனர். இங்கு வளர்க்கப்படும் 33 வயதுடைய சேரன் என்ற வளர்ப்பு யானை, கடந்த ஜூலை மாதம் பாகனால் தாக்கப்பட்டு இடது கண் பார்வையை இழந்தது. ஏற்கனவே வலது கண் பார்வை குறைவாக இருந்த நிலையில் இடது கண் பார்வையும் பறிபோனது.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்ட தீவிர சிகிச்சையின் காரணமாக சேரன் யானைக்கு கண்பார்வை மீண்டும் கிடைத்துள்ளது. தற்பொழுது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உணவு உண்பதும் மற்றும் அதனுடைய உடல் ஆரோக்கியம் தற்போது நலமாக உள்ளது.

யானையை கண்காணிக்கும் வனத்துறையினர் சேரன் யானைக்கு மீண்டும் பார்வை கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!