நீலகிரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓய்வு மின் ஊழியர் கைது

நீலகிரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓய்வு மின் ஊழியர் கைது
X
நீலகிரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற மின் ஊழியரை கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்த காளிமுத்து (60). மின்வாரிய ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்ற போது பாலியல் தொல்லை செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!