முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் குடியரசு தின விழா
X
முதுமலையில் யானைகள் அணிவகுப்பு மரியாதையுடன் நடந்த குடியரசு தின விழா.
By - N. Iyyasamy, Reporter |26 Jan 2022 11:05 AM
ஆண்டுதோறும் ஜன-26 ம் தேதி முதுமலை யானைகள் முகாமில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
நாடு முழுவதும் 73 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகள் அணிவகுப்பு மரியாதையுடன் வனத்துறையினர் தேசிய கொடியேற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
வனச்சரகர் மனோகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அணிவகுப்பில் நின்றிருந்த யானைகள் பிளிறி தேசியக்கொடிக்கு தங்களது வணக்கத்தை தெரிவித்தன. இதில் வனத்துறையினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. வனச்சரகர்கள் விஜய், மனோஜ் உள்ளிட்ட வனத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முதுமலைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu