தேவாலா பஜாரில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்
தேவாலா பஜாரில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார்.
நீலகிரி மாவட்டம் தேவாலா சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி புகுந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தும் காட்டு யானைகளை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்லக் கோரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் தேவாலா பஜாரில் மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு வருடகாலமாக கிராமங்களுக்குள் வரும் இந்த இரண்டு காட்டு யானைகள் கடந்த சில மாத காலமாக தேவாலா அட்டி, வாளவயல், புலியம்பாறை, முண்டகுன்னு சுற்றுவட்ட கிராமங்களில் அடிக்கடி புகுந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த மூன்று மாதத்தில் இந்த யானைகள் சேதப்படுத்தி உள்ளன. யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் இரவு பகலாக ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட போதும் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், வீடுகளை உடைத்து சேதப்படுத்தும் இந்த இரண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் இப்பகுதியில் இருந்து பிடித்து சென்று வேறு அடர் வனப்பகுதிகளில் விடவேண்டும். இல்லையெனில் இவற்றை முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கைை வைத்து சாலைமறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் அதிகமான கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் வனத்துறை உயர் அதிகரிகள் நேரில் வரவேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து போலீசர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி அருகில் உள்ள திருமன மன்டபத்தில் தங்க வைத்தனர். எனினும் பெரும்பாலான மக்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக இந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், தாசில்தார் சிவகுமார், DSP , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேசுவார்த்தையில் தற்காலிகமாக யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க ரோந்து பணியை அதிகரிக்கவும், இந்த இரண்டு யானைகளை கும்கி யானைகளைக் கொண்டு கேரள வனப்பகுதிக்குள் விரட்டவும், யானைகளால் உடைக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார். இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu