கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
X

கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தொடர்ந்து பாடந்துறை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வரும் காட்டு யானையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து அக்கிராம மக்கள் இன்று அதிகாலை கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். அப்போது யானையை விரட்ட வேண்டும் எனவும் காட்டு யானையை பிடித்து முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறை, வருவாய் துறையினர் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் யானையை விரட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!