மின் கணக்கீட்டாளர் செய்த குளறுபடி: தாறுமாறாக எகிறிய கட்டணம் -அதிகாரிகள் நடவடிக்கை..!
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக புதிய மின் மீட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த தேவகி என்ற மூதாட்டிக்கு ரூபாய் 25 ஆயிரத்து 71 ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு அலைபேசியில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த மூதாட்டியின் பாட்டியின் மகன் அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நிலையில் சேரம்பாடி மின்பகிர்மான அலுவலகத்தில் புகார் செய்தார். ஆனால் கடந்த 10 நாட்களாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதேபோல் அதே பகுதியில் பத்தாயிரம் முதல் 15,000 வரை மின் கட்டணம் செலுத்துமாறு பலருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மக்கள் மின் பகிர்மான அலுவலத்திற்கு புகார் அளிக்க நேற்று வந்தனர். இதனை அடுத்து கூடலூர் கோட்ட செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக பழைய மின் மீட்டர் இருந்த நிலையில் வீடுகளுக்கு செல்லாத மின் கணக்கீட்டாளர் ரமேஷ் சென்று கணக்கீடு செய்யாமல் அவரே குறைந்த அளவிலான கட்டணத்தை போட்டு அவர்களை ஏமாற்றி உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் புதிய மின் மீட்டர் பொருத்த பட்ட நிலையில் இரண்டு வருடங்களாக நிலுவையில் இருந்த அத்தனை தொகையும் வந்த நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் தவறு செய்தது தெரியவந்த நிலையில் தவறு செய்த மின் கணக்கிட்டார் மீது துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர் சொந்த தொகையை கொடுக்க உத்தரவிட்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu