கூடலூர் பகுதியில் பராமரிப்பு காரணமாக ஜன 24 மின்விநியோகம் நிறுத்தம்

கூடலூர் பகுதியில் பராமரிப்பு காரணமாக ஜன 24 மின்விநியோகம் நிறுத்தம்
X

பைல் படம்.

மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஜன 24 மின்விநியோகம் நிறுத்தப்படும் என நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்அறிவித்துள்ளார்

நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) ரமேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உப்பட்டி, சேரம்பாடி, கூடலூர் துணை மின் நிலையங்களில் 24.1.2012 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் அப்பகுதிகளை உள்ளடக்கிய உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூர், அத்திகுன்னா, கொளப்பள்ளி, எல்லமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, வுட் ப்ரேர் மற்றும் நம்பர் 3 டிவிசன், சேரம்பாடி டவுன், கன்னம்வயல், நாயக்கன் சோலை, கையுண்ணி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரர், கக்குண்டி, சோலாடி, கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, காந்திநகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடான்தொரை, ஸ்ரீ மதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கார்குடி, தேவர்சோலை பகுதிகளுக்கு மின் வினியோகம் வழங்க இயலாது என்றுஅறிவித்து உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!