நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தளங்களிலும் 8-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என 318 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தடுப்பூசி செலுத்துவதற்காக 20 நடமாடும் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டது.

முதல் டோஸ் செலுத்தி குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தியானவர்கள் 2-வது டோஸ் போட்டுக்கொண்டனர்.

அவர்களது ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.

உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா போன்ற சுற்றுலாத் தலங்களில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags

Next Story
ai marketing future