நீலகிரி வனப்பகுதியில் தென்பட்ட பாறு கழுகுகள்: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

நீலகிரி வனப்பகுதியில் தென்பட்ட பாறு கழுகுகள்: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
X

சீகூர் வனப்பகுதியில் ஒரு இடத்தில் 25 க்கும் மேற்பட்ட பிணந்தின்னிக் கழுகுகள் உணவு உண்பதை படம்பிடித்த வனத்துறையினர்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சீகூர் வனப்பகுதியில் உணவை உண்ணும் பாறு கழுகளை வனத்துறையினர் படம் பிடித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அதேபோல் அரிய வகை பறவையினங்களும் இங்கு காணப்படுகிறது.

அழிந்து வரும் பட்டியலில் உள்ள பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நேற்று கழுகுகளின் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூர் வனப்பகுதியில் ஒரு இடத்தில் 25 க்கும் மேற்பட்ட பிணந்தின்னிக் கழுகுகள் உணவு உண்பதை வனத்துறையினர் படம்பிடித்துள்ளனர். தற்பொழுது இந்த கழுகுகளின் வருகையால் வனத்துறையினரும் பறவை இன ஆர்வலர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!