முதுமலை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன யானைக் குட்டி உயிரிழப்பு

முதுமலை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன யானைக் குட்டி உயிரிழப்பு
X

முதுமலையில் உயிரிழந்த யானைக்குட்டி.

முதுமலை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன யானைக் குட்டி புலி, சிறுத்தை தாக்கியிருக்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பிறந்து ஒரு மாதமே ஆன யானைக்குட்டி இறந்து கிடந்ததை கண்டனர்.

மேலும் வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ பகுதிக்கு வந்து பிரேதப் பரிசோதனை செய்தபின் யானைக் குட்டியின் உடலில் நகம் மற்றும் பற்களால் கடித்த தடம் உள்ளதால் புலி, சிறுத்தை, செந்நாய் கூட்டம் ஏதாவது யானை குட்டியை தாக்கிக் கொன்று இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai based agriculture in india