ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா

ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா
X
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

ஒவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 17 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 5வது வார்டு சேர்ந்த திமுக வேட்பாளர் சித்ராதேவி தலைவரானார்.

துணைத்தலைவர் இடம் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இவரை எதிர்த்து 18-வது வார்டு வேட்பாளர் செல்வரத்தினம் போட்டியிட்டு 13 வாக்குகள் பெற்று துணைத் தலைவரானார்.

தற்போது முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future