கூடலூர் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு? ஆய்வுக்கு வந்த அதிகாரியுடன் நோயாளிகள் வாக்குவாதம்

கூடலூர் அரசு கலைக் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில், நோயாளிகள் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தாக்கம் பரவலாக உள்ளது. அப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கூடலூர் அரசு கலைக்கல்லூரியில், சுமார் 235 படுக்கைகள் உள்ளன. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் உள்ளன.

இந்தலையில், இன்று அரசு கலைக்கல்லூரியில் உள்ள நோயாளிகள், அங்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக, அங்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு கலைக்கல்லூரியில் இருக்கக்கூடிய நோயாளிகள் தங்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாகவும், இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறினர்.

ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம், தரமற்ற உணவு குறித்து புகார் செய்து நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!