நிபா வைரஸ் எதிரொலி: நீலகிரி சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

நிபா வைரஸ் எதிரொலி: நீலகிரி சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்
X

நிபா வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிபாவைரஸ் எதிரொலியாக நீலகிரி-கேரளா எல்லையிலுள்ள சோதனை சாவடிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நிபா வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை பணியில் சுகாதாரத்துறை தீவிரம்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் சென்று வரும் வாகனங்கள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, RTPCR சான்று முதலானவை உள்ளதா எனவும் முழு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கிய சாலை வழி சந்திப்புகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!