உதகை அருகே வனத்துறை மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்

உதகை அருகே வனத்துறை மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
X

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் கால்நடைகளுக்கு வனத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. 

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி, குடற்புழு அகற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, மாயார், சிங்காரா வாழை தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட 16 கிராமங்களில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் கால்நடைகளுக்கு குடற்புழு அகற்றுதல், கோமாரி தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வனத்துறை மூலம் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று தொடங்கிய இந்த கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் எதிர்வரும் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என மசினகுடி கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!