முதுமலை யானைகள் முகாமில் பொங்கல் விழா கொண்டாட்டம்
முதுமலை புலிகள் காப்பகம், யானைகள் வளர்ப்பு முகாமில், யானைகளுடன் பொங்கல் கொண்டாடிய சுற்றுலாப்பயணிகள்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும், மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், யானைகளுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழக அரசு அறிவித்துள்ள கோவிட் வழி நெறிமுறைகளின்படி பொங்கல் விழா நடைபெற்றது.
தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள, 11 வளர்ப்பை யானைகளும், அபயாரண்யம் முகாமில் உள்ள 17 யானைகள் என 28 வளர்ப்பு யானைகள், மாயார் ஆற்றில் குளிக்க வைத்து, சந்தனம் பூசி, யானைகளுக்கு மலர்மாலை சூடி அலங்கரிக்கப்பட்டு, பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
அப்போது, வளர்ப்பு யானைகளுக்கு மிகவும் பிடித்த கரும்பு, வெள்ளம், அண்ணாசி பழம், தேங்காய் உட்பட விருப்ப உணவுகளை யானைகளுக்கு வழங்கி பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது . யானை பொங்கலை காண சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கொரோனா விதிமுறைப்படி இரண்டு தடுப்பு ஊசி செலுத்தி நபர்களை யானை பொங்கல் விழாவிற்கு வனத்துறையினர் அனுமதித்தனர்.
யானை பொங்கலை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ் பி அமிரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யானைகளுக்கு கரும்புகளை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu