கூடலூர் அருகே பகல் நேரத்தில் உலா வந்த மக்னா யானை

கூடலூர் அருகே பகல் நேரத்தில் உலா வந்த மக்னா யானை
X

பைல் படம்.

கூடலூர் அருகே பாடந்துறை கிராமத்தில் பகல் நேரத்தில் உலா வந்த காட்டு யானையால் தோட்டத் தொழிலாளர்கள் ஓட்டம்.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சமீப காலமாக இரவில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வனத்துறையினர் யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கூடலூர் அருகே பாடந்துறை எனும் பகுதியில், பகல் நேரத்திலேயே தேயிலைத் தோட்டம் வழியாக உலா வந்த மக்னா ஒற்றை காட்டு யானையால் தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் மக்கள் கூச்சலிட்டதையடுத்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை தேயிலைத் தோட்டம் வழியாக வனத்தில் சென்றது. தொடர்ந்து அதே பகுதியில் யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!