கூடலூரில் இறந்து கிடந்த சிறுத்தை: வனத்துறை தீவிர விசாரணை

கூடலூரில் இறந்து கிடந்த சிறுத்தை: வனத்துறை தீவிர விசாரணை
X

அம்பலமூலா கிராமத்தில் இறந்து கிடந்த சிறுத்தை.

உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட பிறகே சிறுத்தை உயிர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்பலமூலா கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு துவக்கப்பள்ளியை ஒட்டி தனியார் தேயிலை தோட்டத்தில், சிறுத்தை ஒன்று விழுந்து கிடந்ததை பள்ளி மாணவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து, ஊர் மக்களுக்கும், பின்னர் வனத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கூடலூர் வனத்துறையினர், இறந்த நிலையில் கிடந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

இறந்து கிடந்தது, சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையை ஒட்டிய பகுதியில், சிறுத்தை இறந்து கிடந்தது, வனத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுத்தை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என, வனத்துறை தெரிவித்திருக்கிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil