வில்லங்கம் செய்யும் 'விநாயகன்' - விரட்டுவதற்கு கும்கி யானை வரவழைப்பு

கூடலூர் அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டு யானை விநாயகனை விரட்ட, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, ஓடக்கொல்லி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக, விநாயகன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் யானை சேதப்படுத்தி வருவதால், மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து வருகின்றனர்.

நேற்றிரவும் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானை, விளைநிலங்களை சேதப்படுத்தியது. இது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. முதுமலை யானைகள் முகாமில் இருந்து சங்கர் மற்றும் கிருஷ்ணா என்ற இரு யானைகள், காட்டு யானை விநாயகனை விரட்டும் பணியில் களமிறங்கியுள்ளன. அவற்றுடன், 20க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!