கூடலூர் அருகே தடுப்பூசி இல்லாததால் பழங்குடியின மக்கள் ஏமாற்றம்

கூடலூர் அருகே தடுப்பூசி இல்லாததால் பழங்குடியின மக்கள் ஏமாற்றம்
X

பாடந்துறை சுண்ட வயல் பகுதியில் தடுப்பூசி இல்லாததால் காத்திருந்த பழங்குடியின மக்கள்.

கூடலூர் அருகே பாடந்துறை சுண்ட வயல் பகுதியில் தடுப்பூசி இருப்பு இல்லாமல் பழங்குடியின மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் , கூடலூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அனைவரும் தடுப்பூசி செலுத்த அந்தந்த முகாம்களுக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை சுண்ட வயல் பகுதியில் நேற்று 200 பேருக்கு தடுப்பூசி டோக்கன் வழங்கப்பட்டது. இன்று அதிகாலை முதலே தடுப்பூசி செலுத்த மக்கள் வருகை புரிந்தனர். ஆனால் காலையில் 40 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திவிட்டு மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி இருப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலான மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

வெகு தொலைவிலிருந்து தடுப்பூசி செலுத்த வந்த பழங்குடியின மக்கள் டோக்கன் வழங்கியும் ஏன் தடுப்பூசி இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story
ai marketing future