கூடலூரில் மனைவியை வெட்டிய கணவனுக்கு 3 ஆண்டு ஜெயில்

கூடலூரில் மனைவியை வெட்டிய கணவனுக்கு 3 ஆண்டு ஜெயில்
X

பைல் படம்.

மனைவியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கணவனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் கொளப்பள்ளியை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற முருகன் (45) மனைவி லின்சி(36). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்ததால் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி வெளியூர் செல்வதற்காக லின்சி பந்தலூர்பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த கணவர் யோகேஸ்வரன் அரிவாளால் லின்சியை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த லின்சி கூடலூர் அரசு மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், தேவாலா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேம் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். பின்னர் யோகேஸ்வரனை கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், இந்தவழக்கு விசாரணை கூடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில், கூடலூர் உதவி சார்பு நீதிபதி வெங்கட சுப்ரமணியன் குற்றம் சாட்டப்பட்ட யோகேஸ்வரனுக்கு 3ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.2,000அபராதமும் விதித்து தீர்பளித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!