கூடலூரில் சாரல் மழை, கடுங்குளிர்: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கூடலூரில் சாரல் மழை, கடுங்குளிர்: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

கூடலூரில் பெய்து வரும் மழையால் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் உதகை, குன்னூர் , கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது

நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர், கோத்தகிரி கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்த மேகமூட்டம் மற்றும் கடும் குளிருடன் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் அடர்ந்து மேகமூட்டம் காணப்பட்டது. பிற்பகல் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான நடுவட்டம், லவ்டேல், கேத்தி, பாலடா உள்ளிட்ட பகுதிகளில் மேக மூட்டத்துடன் மழை பெய்யத் தொடங்கியது.

கூடலூரில் பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்கள் சாலைகளில் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை இட்டு சாலையில் ஊர்ந்தபடி சென்றன. மேலும் கூடலூரில் கடும் குளிருடன் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

Tags

Next Story
why is ai important to the future