நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை

நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
X
கனமழையில் சிக்கிக் கொண்ட ஆட்டோ.
முதுமலையை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின.

கூடலூர் அருகே உள்ள முதுமலை சுற்றுப்பகுதிகளில் இன்று மதியம் 2 மணிக்கு துவங்கிய கனமழை 5 மணி வரை நீடித்தது. இதனால் பல கிராம பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்தது. முதுமலை பகுதியில் உள்ள குற்றி முச்சியில் காட்டாற்று வெள்ளத்தில் ஆட்டோ அடித்துச் செல்லப்பட்டது. செரு முள்ளி பகுதியில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்தது இதுமட்டுமல்லாமல் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பாகற்காய், வாழை, பாக்கு நாற்று, உள்ளிட்டவை நீரில் மூழ்கின. இந்த கனமழையால் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலைகளில் மழைநீர் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!