பந்தலூரில் கொட்டி தீர்த்த கனமழை

பந்தலூரில் கொட்டி தீர்த்த கனமழை
X

பந்தலூரில் பெய்த கனமழை.

பந்தலூரில் இடைவிடாது 4 மணிநேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளான பந்தலூர், தேவாலா, நாடுகாணி, முதுமலை, நடுவட்டம், தேவர்சோலை பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மற்ற பகுதிகளில் குறைவான மழை பெய்த நிலையில் பந்தலூர் பகுதியில் மட்டும் இன்று காலை முதல் இடைவிடாமல் 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையால் மக்கள் வெளியில் வரமுடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பந்தலூர் நகரப் பகுதிக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வந்த மக்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்